வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:40 IST)

ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர்? ஓபிஎஸ் ரியாக்‌ஷன் இதுதான்..!!

எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதலவர் வேட்பாளரா என கேட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது என்பதில் பூசல்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
எம்.எல்.ஏக்க சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என செல்லூரார் சொல்ல, ஒரே முதல்வர் எடப்பாடியார்தான் என ராஜேந்திரபாலாஜி சொல்ல அமைச்சர்கள் ஆளுக்கொரு எண்ணத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியாரை முன்னிறுத்துவது ஓபிஎஸ் அணியினரை அப்செட் ஆக்கியதாகவும் கூறப்படுகிறது.
 
செய்தியாலர்கள் இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று அவசரம் இல்லாமல் பதில் அளித்துள்ளார்.