தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மற்ற 31 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே 2 முறை ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
அதேபோல், அவர் பதவியேற்கு முன்பே அதிமுக எம்.எல்.ஏக்களால், சட்டமன்ற தலைவராகவும் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.