ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (10:58 IST)

அதிமுக, திமுகவுக்கு அடுத்து நாங்கதான்..! – நம்பிக்கையளிக்கும் நாம் தமிழர் வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. இவை தவிர்த்த அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவையும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. 234 தொகுதிகளில் மொத்தமாக கணக்கிடுகையில் அதிமுக, திமுகவிற்கு பிறகு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ள கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.