செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : சனி, 19 அக்டோபர் 2024 (10:00 IST)

இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த வட நாட்டு வாலிபர் கைது!

சென்னை விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் நேற்று இரவு வடநாட்டு வாலிபர் ஒருவர் தான் சொந்த வீடு போல வீட்டுக்குள் போவதும் வருவதுமாக சுற்றித்திரிந்து வந்துள்ளார் 
 
இந்நிலையில் ஒரே வீட்டிற்குள் இரண்டு முறை புகுந்துள்ளார் அப்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் யார்  என்று கேட்க  அங்கிருந்து தப்பித்து விட்டார்.
 
மூன்றாவது முறையும் அதே வீட்டிற்குள் நுழைந்த  வாலிபரை பார்த்து வீட்டில் தனியாக இருந்த பெண் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வர தப்பித்து  சென்றார் அந்த மர்ம வட நாட்டு வாலிபர்.
அந்த நேரத்தில் அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட விருகம்பாக்கம் (ஆர் 5) நட்ராஜ் என்ற காவலர்   அந்த மர்ம வட நாட்டு வாலிபரை வசமாக மடக்கி பிடித்தார்.
 
எதற்காக வீடு புகுந்தார் அவர் மீது வேறு ஏதேனும் குற்ற செயல்கள் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் திருட்டு குற்ற செயல்களில் ஈடுபடவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.