வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (15:02 IST)

‘மனிதன்’ தமிழ் வார்த்தை கிடையாதாம்; வரி விலக்கு ரத்து : கோர்ட்டுக்கு போகும் உதயநிதி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மனிதன்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துள்ளது. 


 

 
‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, விவேக் மற்றும் பலர் நடித்துள்ள ‘மனிதன்’ படம் நேற்று வெளியானது.
 
வழக்கம்போல், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்திற்கு ஏதாவது காரணம் கூறி கேளிக்கை வரி அளிக்க மறுக்கும் தமிழக அரசு, இப்படத்திற்கும் வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளது.
 
என்ன காரணம் என்று கேட்கிறீர்களா?...  ‘மனிதன்’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே கிடையாதாம் (அம்மாடியோவ்).. 
 
தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில், இரண்டு பேர் இந்த படத்தின் தலைப்பு தமிழில்தான் உள்ளது மற்றும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ற படம் என்று பரிந்துரை செய்தாலும், மற்ற மூன்று பேர் தலைப்பு தமிழில் இல்லை என்று கூறி, இந்தப்படம் கேளிக்கை வரிவிலக்களிக்க தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளார்கள்.
 
எனவே நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளார் உதயநிதி. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “ தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் நான் வெற்றி பெறுவேனா என்று தெரியாது. ஆனால் நான் தொடர்ந்து போராடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் கடைசியாக நடித்து வெளியான படத்தில் தலைப்பான ‘கெத்து’ தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் பின்னரே உதயநிதி வரிவிலக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, ஒவ்வொரு முறையும் உதயநிதி படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு மறுப்பதாக கூறப்படுகிறது.