1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (20:11 IST)

மெரினாவில் இடமில்லை: தலைமை செயலாளர் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் திமுக தலைவரின் உடல் அறிஞர் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு திமுக சார்பில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
 
ஆனால் சட்டச்சிக்கல் காரணமாக மெரினாவில் கருணாநிதிக்காக இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்றும், அதற்குக் பதிலாக சர்தார் வல்லாபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம், மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக தலைமை செயலர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.