Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பல்லோவில் பூஜைக்கு ஆப்பு வைத்த பிரதாப் ரெட்டி!

அப்பல்லோவில் பூஜைக்கு ஆப்பு வைத்த பிரதாப் ரெட்டி!

வியாழன், 1 டிசம்பர் 2016 (15:26 IST)

Widgets Magazine

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 70 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அங்கு ஏராளமான அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திலும், மருத்துவமனைக்கு வெளியிலும் ஜெயலலிதாவுக்காக ஏராளமான பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.
 
இதனால் மருத்துவமனை நிர்வாகமும், அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கும் தடையாக உள்ளது அதிமுகவினர் செய்யும் பூஜைகள். இதனால் கூட அப்பல்லோவிற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஆவேசமடைந்த பிரதாப் ரெட்டி அப்பல்லோ வளாகத்தில் பூஜை செய்ய தடை விதித்ததாக கூறப்படுகிறது.
 
சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், மருத்துவமனை முன்பு பூசணிக்காய் உடைப்பதற்கும் அதிமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் பூஜை செய்வதற்கு பயன்படுத்தி வந்த இடத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி தற்போது அங்கு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய வீரர்- அதிர்ச்சி வீடியோ

ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பிரபல ...

news

ரிசர்வ் வங்கியில் பணம் இல்லை; செல்லாத 100 ரூபாய்களை அனுப்பும் ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கியில் போதுமான பணம் இல்லை என்றும் அழுக்கடைந்த செல்லாத 100 ரூபாய் நோட்டுக்களை ...

news

நம்பர் 1 இடத்துக்காக நடுவரை தூக்கி வீசிய ஆணழகன் (வீடியோ)

கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டியில் கியான்னிஸ் மேகோஸ் என்பவர், தன்னை ...

news

அப்பாவுக்கு இப்படி இருக்கும் போது ஸ்டாலின் செயல் தலைவரா?: கொந்தளித்த அழகிரி!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ...

Widgets Magazine Widgets Magazine