1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (17:14 IST)

அதிமுக அலுவலத்தில் ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த ஆள் இல்லை

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இறந்ததையடுத்து துக்கம் அனுசரிக்கும் வேலையில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சி கொடி மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கின்றது. ஆனால்  அஞ்சலி செலுத்த ஆள் இல்லை. 


 

 
தமிழக மறைந்த முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா கடந்த 5 ம் தேதி இரவு 11.30 மணியளவில் காலமானார்.
 
இதையடுத்து தமிழக அளவில் ஒரு வாரம் அரசு துக்கம் அனுசரிக்கவும், மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளித்தது. ஆனால் கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் கொடி மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுள்ளதே  தவிர மறைந்த முதல்வரும், அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த ஆள் இல்லை.
 
கவலைகிடமான நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க உள்ளதா  இல்லை, அஞ்சலி செலுத்துவதற்கு ஆள் இல்லையா என்று கட்சியினருக்குள்ளேயே கேள்வி எழுந்துள்ளது. 


 

 
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை நியமிக்கப்பட்டதில் இருந்தே இதே போல தான் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
 
தற்போது அஞ்சலி செலுத்த கூட ஆள் இல்லையா என்று பல்வேறு விதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் தினந்தோறும் மெளன அஞ்சலியோடு, கருப்பு பட்டை அணிந்தும், மொட்டை அடித்தும் பல பல காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் மட்டும் என்றாவது ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சி நடத்துவதாக அ.தி.மு.கவினர் கொந்தளித்துள்ளனர்.
 
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்