வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:16 IST)

P.E.T பீரியட் வேளையில் மற்ற பாடங்கள் எடுக்ககூடாது- அன்பிஷ் மகேஷ்-

P.E.T வேளையில் மற்ற பாடங்கள் எடுக்ககூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது: 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், P.E.T  பீரியட் வேளையில் மற்ற பாடங்கள் எடுக்க கூடாது என  நாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், P.E.T  பொழுதுபோக்கு மட்டுமல்ல,மாணவர்கள் தங்களை புத்துணர்வு ஏற்படுத்துவதற்காக நேரம் என்றும் அவர் தெரிவித்து, அந்த வேளையில், கணக்கு, அறிவியல் போன்ற பாடங்கள் எடுக்க ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.


கடந்த 14 ஆம் தேதி  தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அடுத்த  நாள்  அவர் சென்னையில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பள்ளி நாட்களில் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும் என மாணவி ஒருவர்  அமைச்சர் உதய நிதியிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited By Sinoj