வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:18 IST)

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் கிடையாது: நீதிபதிகள் அதிரடி!

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் கிடையாது: நீதிபதிகள் அதிரடி!

ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு மனுவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.


 
 
500 பக்கத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழக்கினர் நீதிபதிகள். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் சிறையில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் எந்த விசேஷ சலுகையும் காட்டகூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளது.
 
சென்ற முறை ஜெயலலிதா சிறையில் இருந்த போது A பிரிவு வசதி கொண்ட சிறை அறை வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை இவர்களுக்கு எந்த விசேஷ சலுகையும் கொடுக்க கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளதால் இவர்களுக்கு சாதரண சிறை அறையே அளிக்கப்படும்.
 
இந்த தீர்ப்பில் நீதிபதிகள் குற்றவாளிகளை மக்களின் நம்பிக்கையை கொன்றவர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இவர்களை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான சிறை அறைகள் தயாராகின்றன.