புதன், 2 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2016 (14:18 IST)

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டு என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


 

 
கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவில் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை அவரது புகைப்படத்துடன் வெளியிடவேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
 
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இது பொதுநல வழக்கு அல்ல என்றும் சுய விளம்பரத்துக்கான வழக்கு எனவும் கருத்து கூறியது. 
 
மேலும், தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.