வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:47 IST)

ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் தகவல்!

ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் நுழைந்துவிட்ட இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் பெங்களூரில் 5 பேர் உள்பட மொத்தம் ஏழு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா மா சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரசால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்