தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் கிடையாது! ஏன் தெரியுமா?
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது என்றும், இந்த தொகுதிகள் போக மீதி 18 தொகுதிகளிலும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 18 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடியும் வரை இலவச திட்டங்கள் வழங்க அனுமதி இல்லை என்றும் சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார். எனவே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் என்ன் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்