20 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல் விலை!
சென்னையில் கடந்த 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராமல் ஒரே நிலையில் இருப்பதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அந்த வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.