திமுகவும் இல்லை, சீமான் கட்சியும் இல்லை: தனித்து போட்டியிடும் கமல் கட்சி?
வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதாக தெரிகிறது
கமல்ஹாசன் தரப்பில் இருந்து 40 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே திமுக தர முன் வந்ததாகவும் இதனால் பேச்சுவார்த்தை முறிவு அடைந்ததாகவும் கூறப்படுகிறது
அதேபோல் சீமான் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது தாங்கள் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டோம் என்றும் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அக்கட்சியில் இருந்து பதில் வந்ததாக தெரிகிறது
இதனை அடுத்து திமுக மற்றும் சீமான் கட்சியினர் கூட்டணி இல்லாத நிலையில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தான் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சி தள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் வெளியேறினால் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது