வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (01:18 IST)

என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண திருமாவளவன் கோரிக்கை

நெய்வேலி நிறுவன தொழிலாளர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2011ஆம் ஆண்டிலிருந்து இழுபறி நிலையில் உள்ளது.
 
தங்களுக்கு, 25 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன், 2000க்கும் மேற்பட்டோருக்கு வாரிசு அடிப்படையில் வேலைகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.  அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தொழிலாளர்களின் நியாயமான இது போன்ற கோரிக்கைளை ஊதாசீனம் செய்து,  பேச்சுவார்த்தை என்ற பெயரில் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. 10 விழுக்காட்டிற்கு மேல் ஊதிய உயர்வு வழங்க இயலாது எனப் பிடிவாதம் செய்கிறது.
 
இதனை வெறுமனே தொழிலாளர்களின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல்,  தமிழக மக்களின் பிரச்சனையாகக் கருதி தமிழக அரசும், மத்திய அரசும் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.