1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (14:52 IST)

9 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு வேலை நாள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி தமிழகம் மற்றும் புதுவயல் ஒத்திவைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva