வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (09:36 IST)

கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை ஏன்?

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான, உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் வீடுகளில் சோதனை நடநது வருகிறது.

கைதான உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் உறவினர்கள், நண்பர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், இஸ்மாயிலுக்கு சொந்தமான திண்டிவனம் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.