வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (14:58 IST)

இனி மழைக்கு வாய்ப்பே இல்லை.. கொளுத்தப்போகும் வெயில்: வானிலை அறிவிப்பு!

heat
தென்கிழக்கு பருவமழை, வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்து சில மாதங்களாக மழை பெய்து வந்தது என்பதை பார்த்தோம்,
 
இந்த நிலையில் இனி மழைக்கு வாய்ப்பே இல்லை என்றும் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை தான் நிலவும் இன்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பிப்ரவரி 8 முதல் 12 வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பனிமூட்டம் சற்று கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெயில் காலம் நெருங்கி வருவதால் கோடை வெயில் இந்த ஆண்டு கொளுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran