அடுத்த அட்டாக் மு.க.ஸ்டாலின் மீதுதான்: பாஜக கனவு பலிக்குமா?


sivalingam| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (10:25 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்பதற்காக பலவித திரைமறைவு வேலைகளை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் பாஜக மேலிடத்தின் அடுத்த குறி ஸ்டாலின் தான் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் ஸ்டாலின் மிதான அட்டாக்கை தொடங்கலாம் என்று மேலிடம் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


 


தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என தனிநபர் செல்வாக்கு தலைவர்கள் தான் கோலோச்சி வந்தனர். இப்போதைக்கு தமிழகத்தில் தனிநபர் செல்வாக்கு உள்ள ஒரே நபர் மு.க,ஸ்டாலின் தான். அவரை மட்டும் வென்றுவிட்டால் தமிழகத்தில் இனி பாஜக ஆட்சிதான் என்று மேலிடம் கருதுவதாகவும், எனவே தான் ஸ்டாலின் மீதான அட்டாக் என்றும் கூறாப்படுகிறது.

இந்த உத்தரவின்படிதான் கடந்த சில வாரங்களாகவே மு.க.ஸ்டாலின் மீது தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலினை தங்கள் தலைவராக திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் பாஜகவின் கனவு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :