1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (14:47 IST)

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் 24 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வருகின்ற சனி, ஞாயிறு கிழமைகளில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது 12 செ.மீ முதல் 24 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா செய்தியாளருகளுக்கு தெரிவித்திருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சியானது இன்று காலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.
 
காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருக்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
 
இதனால் நாளை தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக 29ஆம் தேதி அன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அன்றைய நாளில் 12 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.