அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..

Arun Prasath| Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (09:47 IST)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் மழை குறைந்த அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :