செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (16:34 IST)

அதிமுகவின் தொலைக்காட்சி சேனல் - 12ம் தேதி சோதனை ஓட்டம்

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி பிளவடைந்ததால் ஜெ.டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளேடு போன்றவை தற்போது டி.டிவி.தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அவை அ.ம.மு.க.தின்(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்) கட்சி ஊடகமாகவும் செயல்பட்டு வருகிறது.

 
அ.தி.மு.க.வுக்கு என அதிகாரப் பூர்வமான சேனல் எதுவும் இல்லாதிருந்த நிலையில் அதற்கான பணிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டு சில மாதங்களாக புதிய டி.வி. சேனலை  ஒன்றைத் தொடங்கவும் முடிவு செய்தனர்.
 
அந்த புதிய சேனலுக்கு ஜெயலலிதா பெயரில் அதாவது “நியூஸ் ஜெ” என்று பெயரிட்டு அது அ.தி.மு.க. வின் அதிகாரப் பூர்வ சேனலாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன் சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குவதாகவும் இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அன்றைய தினமே புதிய டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப், இணைய தளம், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட விபரங்களை தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிகிறது.
 
அ.தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ஜெ.நியூஸ் சேனலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தயார் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.