டிடிவி பேரவை ; புதிய கட்சி தொடங்குகிறாரா தினகரன்?


Murugan| Last Updated: வியாழன், 4 மே 2017 (14:15 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் புதிய பேரவை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தனது உறவினர் டிடிவி தினகரனை, அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா. அதன் பின், அதிமுகவின் தலைமயாக செயல்பட்டார் தினகரன். 
 
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தது, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தினகரனின் பெயரில் பேரவை துவங்கப்பட்டு போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தின் கையை விட்டு அதிமுக மெல்ல மெல்ல நழுவிக் கொண்டிருப்பதால்,  மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த தினகரனின் ஆதரவாளர்கள் அவரின் பெயரில் தனிப் பேரவையை துவங்கியிருப்பதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :