தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: சிக்குகிறார் திருச்சி தொழிலதிபர்

sivalingam| Last Modified சனி, 29 ஏப்ரல் 2017 (06:33 IST)
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு புரோக்கர் சுகேஷ் மூலம் ரூ.60 கோடி கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் தினகரனிடம் தற்போது டெல்லி போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஹவாலா பணம் நரேஷ் என்பவர் மூலம் கைமாறப்பட்டதாகவும், இந்த கைமாற்றலில் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் திருச்சி தொழிலதிபர் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்

தினகரன் வழக்கில் ஏற்கனவே ஒரு எம்பி மற்றும் தினகரனின் வலது கை போன்று செயல்பட்ட ஒருவர் குறி வைக்கப்பட்டு அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த லிஸ்ட்டில் திருச்சி தொழிலதிபரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :