வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (20:14 IST)

நகராட்சித் தேர்தலில் ஓட்டுப்போட புதிய வசதி

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர், பாஜக  உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் இந்த 19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதன்படி,  தற்போது ஓட்டு போடும் மக்களுக்கு சுலபமாக ஒரு இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டால் பல விவரங்கள் தெரியும் எனத் தெரிவித்துள்ளது. மேலும்,  மா நகராட்சியின் 200 வாடுகள்  பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள know your polling station  என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.