திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (11:02 IST)

இந்தியாவில் இதுதான் முதல்முறை: சென்னை ஐஐடி அறிமுகம் செய்யும் மருத்துவ-தொழில்நுட்ப பட்டப்படிப்பு..!

Chennai IIT
இந்தியாவில் முதல் முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் நான்காண்டு பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளதை அடுத்து இந்தியாவில் இதுதான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் படிப்பு என்பது கூறப்படுகிறது. 
 
சென்னை ஐஐடியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு துறைகள் இயங்கி வரும் நிலையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 
 
மருத்துவம், தொழில்நுட்பத்தில் பிஎஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்பை சென்னை ஐஐடி இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. மருத்துவமனை தொழில்நுட்பம் இடையே கூட்டு ஆராய்ச்சியான இந்த படிப்பு  மருத்துவத்துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதற்கான ஏற்பாடு ஆகியவை இந்த படிப்பின் மூலம் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
 
விண்வெளி, அணுசக்தி, டிஜிட்டல், உயரி, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஏற்கனவே நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம். அந்த வகையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு துறையில் புதிய அடித்தளமாக அமையும் வகையில் இந்த படிப்பு இருக்கும் என்று சென்னை ஐஐடியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran