வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:21 IST)

சென்னை பிராட்வேவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு

nehru
சென்னை பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் நிலையில் மற்றொரு பேருந்து நிலையம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது