புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (17:36 IST)

கருணாநிதி பாணியில் பேசிய ஸ்டாலின்: செயற்கையாக இருப்பதாக கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து முக ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியானது 
 
பொதுவாக கடந்த பல வருடங்களாக ஸ்டாலினின் பேச்சை கேட்ட பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களுக்கு இந்த வீடியோவில் ஸ்டாலின் பேசியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அவர் ஒரு இடத்தில் கூட ‘ஆக’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி அவர் பேசிய பாணி கருணாநிதி பேசியது போலவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நெட்டிசன்கள் முக ஸ்டாலின் பேசி திமுக வெளியிட்டுள்ள வீடியோ உணர்வுபூர்வமானதாக இல்லை என்றும் அவரது வழக்கமான பேச்சு மிஸ் ஆகியுள்ளதாகவும் எனவே இந்த வீடியோவில் அவர் பேசியது செயற்கையாக இருப்பதாகவும் இது பிரசாந்த் கிஷோரின் ஐடியாவாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர் 
 
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாணி பேச்சு இருக்கும். அந்த பேச்சின் படி பேசினால் மட்டுமே மக்களிடம் எடுபடும் என்றும் கருணாநிதி போன்று ஸ்டாலின் மிமிக்ரி செய்து பேசுவது திமுக தொண்டர்கள் வேண்டுமானால் பாராட்டும் வகையில் இருக்கும் என்றும், பொதுமக்கள் மத்தியில் இந்த பேச்சு கேலிக்குரியதாக இருந்ததாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்