செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:44 IST)

சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவர்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

Knife
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் 9ம் வகுப்பு மாணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் வகுப்பு மாணவர் வெட்டியதாகவும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
அரிவாளால் தாக்கி விட்டு அந்த மாணவர் தப்பியோடியதாக நாங்குநேரி ஏ.எஸ்.பி. டாக்டர் பிரசன்ன குமார் தகவல் தெரிவித்துள்ளார்.தற்போது அரிவாளால் வெட்டிய மாணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை வலைவீசி தேடிய வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் அரிவாளால் சக மாணவரை விட்டும் அளவுக்கு விரோதம் வளர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran