1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:09 IST)

காட்டுக்கு போலாம் வா... நம்பி போன சிறுமியை நசாமாக்கிய சிறுவன்!

17 வயது சிறுவன் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். பழக்கமான நபர் என்பதால் அந்த சிறுமியும் அவனுடன் செல்ல அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பெயரில் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.