1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2015 (23:51 IST)

கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா? பொங்கி எழுந்த கருணாநிதி

கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா?" என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என திமுக தலைவ ர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. விக்கிரமராஜா அவர்கள் கூறும்போது, ஒரு மாதத்துக்குத் தேவை என்பது லட்சம்டன்களைத் தாண்டும்.
 
இதனை பருப்பு விளைச்சல் நடைபெறும் ஜனவரி,பிப்ரவரி, மாதங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருக்க வேண்டும்.ஆனால் மத்திய, மாநில அரசுகள் செய்வதில்லை. அதுதான் தற்போது பருப்பு தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம். தட்டுப்பாட்டைப் போக்க 500 மெட்ரிக்டன் துவரம் பருப்பை மத்திய அரசிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தமிழக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை தான்.
 
இது தமிழக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு பதவியேற்ற போது ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 52 ரூபாயாக இருந்தது, தற்போது நான்கு மடங்காக 210 ரூபாய் என்று விலை உயர்ந்துள்ளது.
 
கோடநாடு அரண்மனையில் ஓய்வில் இருந்து கொண்டே அரசுப் பணி ஆற்றுவதாகக் காட்டிக் கொள்ள, ஒருவேளை இந்தப் பிரச்சினை பற்றி முதல் அமைச்சர் விவாதிப்பதற்காக அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கோடநாட்டிற்கு வரச் சொல்லி, அங்கே ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினாலும் நடத்துவார்.
 
இதையெல்லாம் பார்க்கும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் "கும்பி எரியுது; குடல் கருகுது,குளுகுளு ஊட்டி ஒரு கேடா?"என்று அப்போது கேட்டதைத் தான் சற்று மாற்றி,"கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா?" என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என தெரிவித்துள்ளார்.