1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (13:38 IST)

வாயை மூடுங்கள் ; மைத்ரேயன் கூறியது உண்மைதான் - நத்தம் விஸ்வநாதன் விளாசல்

அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மைத்ரேயன் தனது முகநூலில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார். 
 
மேலும், இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்” எனவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், திண்டுக்கல்லில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ மைத்ரேயன் கூறியது முற்றிலும் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றனர். அவர்களுக்கு நாவடக்கம் தேவை” என பதிலளித்தார்.