வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (13:06 IST)

குப்புற விழுந்த நத்தம்... ஆய்வுக்கு சென்ற இடத்தில் அசம்பாவிதம்!

வானகரத்தில் பொதுக்குழு ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்தார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். 
 
இதனைத்தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அருகே வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். 
 
வானகரத்தில் பொதுக்குழு ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்தார். தடுமாறி விழுந்த நத்தம் விஸ்வநாதனை அதிமுக நிர்வாகிகள் தூக்கிவிட்டு தண்ணீர்தந்து அமர வைத்தனர். இதனால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது.