1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:05 IST)

நடராஜனுக்கு உடல் நலக்குறைவு - அப்பல்லோவில் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் அடுத்த முதல்வருமான வி.கே.சசிகலாவின் கணவர் நடராஜன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 

 
நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலா அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என்ற தீர்மானத்தை, தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். எனவே, வருகிற 9ம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக, அவர் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் தங்கி ஓரிரு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.