வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (17:41 IST)

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடராஜன்...

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.


 

 
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. 
 
முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவர்களுடன் நடராஜன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 


 

 
அதேபோல், அவர் மருத்துவர்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இன்று வெளியானது. அந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவர் பூரண குண நலம் பெற்றுவிட்டார் எனத் தோன்றியது. 
 
இந்நிலையில், அவர் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 7 மணியளவில் அவர் வீடு திரும்பி விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.