வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (15:44 IST)

ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் ஜெயில் உறுதி; தினகரனை தடுக்கும் நடராஜன்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சம் ஜெயிலுக்குப் போவது உறுதி என தினகரனை தடுத்து வருகிறாராம் சசிகலா கணவர் நடராஜன்.


 
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இரட்டை இலையை மீட்போம் என டிடிவி தினகரன் கூறினார். மக்கள் மத்தியில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது, நிச்சயம் வெற்றிப் பெறுவோம் என கூறி வருகிறார். 
 
ஆனால் சசிகலா கணவர் நடராஜனுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுகுறித்து நடராஜன் அவரது குடுமத்தினரிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் போட்டியிட்டாமல் இருப்பது நல்லது. டெல்லியில் இருந்து நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் நாம் போட்டியிடலாம். மாநிலம் முழுவதும் பரவலாக நமக்கு உள்ள பலத்தை முன்வைத்து களமிறங்குவோம்.
 
ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தால், எவ்வித வருமான வரித்துறை சோதனையும் நடக்காது. நமக்கான நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்து உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நடராஜன் சொகுசு கார் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
 
ஆனால் டிடிவி தினகரன் சின்னத்தையும், கட்சியையும் கைபற்றாமல் விடமாட்டேன் என்று விடாபிடியாக போராடி வருகிறார்.