செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:18 IST)

புதுவை இந்தியா கூட்டணியில் கருத்துவேறுபாடுகள் உள்ளது உண்மைதான்: நாராயணசாமி

narayanasamy
புதுவை  மாநில இந்தியா கூட்டணியில்  எந்த வித விரிசலும் இல்லை என்றும் ஆனால் அதே சமயத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளது உண்மைதான் என்றும் காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில்  எந்த விரிசலும் இல்லை என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் தான் அதிக விரிசல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி  ராகுல் காந்தியின் அமைதியான பாதயாத்திரையை குலைக்க  பாஜக திட்டமிடுவதாக குற்றச்சாட்டு கூறினார்.  மேலும் காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே சுதந்திரம் பெற்றோம் என்றும் அதை கொச்சை படுத்துற விதத்தில் பேசும் கவர்னரை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். 
 
ஆளுநர் தமிழிசை பாஜகவுக்கு விளம்பரம் தேடி வாக்கு சேகரிக்கிறார் என்றும் அது அவரது பதவிக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.

புதுவையை பொருத்தவரை இந்தியா கூட்டணியில் எந்த விதமான விரிசலும் இல்லை என்றும் ஆனால்  கருத்து கருத்து வேறுபாடுகள் உள்ளது என்றும் அதை தலைமை என்ன செய்கிறதோ அதன் மூலம் சரிப்படுத்துவோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Edited by Siva