உன்னை கேள்வி கேட்க எவனுக்கும் தகுதி இல்லை: சூர்யாவுக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது கருத்துக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதில் உள்ள சில பாதகமான அம்சங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று கூறிய சூர்யா, மத்திய மாநில அரசை மறைமுகமாக தாக்கியது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது
சூர்யாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எச் ராஜா ஆகியோர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சூர்யாவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். சூர்யா ஒரு அரைவேக்காடு என்றும் அவருக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி என்ன தெரியும் என்றும் அவர் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி சூர்யா ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்த நிலையில் அவ்வப்போது அதிரடி கருத்துக்களை தெரிவித்து வரும் நாஞ்சில் சம்பத் இதுகுறித்து கூறியபோது, 'தம்பி சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் அப்பாவி மக்களின் கல்விக்கு உதவுகிற நீ .. தகரச்சட்டங்களை பொருட்படுத்தாதே. சிகரங்களை நோக்கிய உன் பயணத்தை தகரங்களின் சத்தங்கள் எதுவும் செய்துவிடாது என்று ஒரு டுவீட்டிலும், இன்னொரு டுவீட்டில் புதிய கல்விக் கொள்கையை கேள்வி கேட்கிறத் தகுதி எல்லோரையும் விட உனக்கு அதிகமாகவே இருக்கிறது. உன்னை கேள்வி கேட்கத்தான் எவனுக்கும் தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்.
சூர்யாவின் 'காப்பான்' திரைப்படத்தை அரசியல்வாதிகளே வெற்றி பெற செய்துவிடுவார்கள் போல் தெரிவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.