Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் ஒரு அம்பல குடுக்கை: சீறும் நாஞ்சில் சம்பத்!

ஓபிஎஸ் ஒரு அம்பல குடுக்கை: சீறும் நாஞ்சில் சம்பத்!


Caston| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (18:12 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அம்பல குடுக்கை எனவும் அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எனவும் சசிகலா அணி நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வெளியே வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா அணியை சேர்ந்தவர்கள் துரோகி எனவும், கழகத்தை காட்டிக்கொடுத்தவர் எனவும், பதவி வெறி பிடித்தவர் எனவும் பல இடங்களில் கூறி வருகின்றனர்.
 
ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவை எதிர்த்த நாஞ்சில் சம்பத் தற்போது அவர்களின் தீவிர விசுவாசியாக இருக்கிறார். அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக கூறிய பின்னரும் சசிகலா, தினகரன் ஆகியோரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்.
 
அதே நேரம் பாஜகவையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். நாஞ்சில் சம்பத் அதிரடியாக பேட்டிக்கொடுப்பதில் வல்லவர். மனதில் படுவதை கொஞ்சமும் யோசிக்காமல் மீடியா முன்பு கூறிவிடுவார்.
 
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார். அப்போது ஆர்கே நகர் தேர்தலின் போது பணம் பாதாளம் அவரை பாய்ந்தது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை செய்தியாளர் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், ஒரு மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் என்றுகூட பார்க்காமல் ஒரு அம்பல குடுக்கை சொல்றத பற்றி ஏன் என்னிட கேட்கிறீர்கள் என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :