Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தை மாதத்தில் திமுகவில் இணைவு: நாஞ்சில் சம்பத் சூசகம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (18:15 IST)
அதிமுகவில் இன்னும் நீடிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்’ என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

 

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ”அதிமுகவில் இருந்து தான் இன்னும் விலகவில்லை. கட்சியினரும் தன்னை விலக்கவில்லை.

முதல்வர் மரணத்திற்கு பிறகு மவுனம் காத்து நின்றால், மவுனம் காக்க வேண்டும், அதுவே அவருக்கு செய்ய வேண்டிய அஞ்சலி. எனவே மவுனம் காத்தேன், மேலும், நீடிப்பது குறித்தோ, விலகுவது குறித்தோ நான் முடிவு எடுக்கவில்லை.

சசிகலா அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர்களை பார்த்தது இல்லை, பழகியதும் இல்லை, அவரை சந்தித்ததும் இல்லை. சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, போதும் இந்த பொதுவாழ்வு என்ற மனநிலைக்கு தான் வந்ததாகவும், கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழகத்தில் வலம் வந்துவிட்டேன்” என்றார்.

அதிமுகவில் நீடிப்பது குறித்து கேட்ட போது, ”தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :