Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவின் சீராய்வு மனு அவ்ளோ தான்: அரசியல் ஸ்டண்ட் ஆரம்பம்!

சசிகலாவின் சீராய்வு மனு அவ்ளோ தான்: அரசியல் ஸ்டண்ட் ஆரம்பம்!


Caston| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (13:41 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ள நிலையில் சசிகலா மீது புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
 
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கர்நாடகா டிஜிபிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் சிறைத்துறை டிஐஜி ரூபா. இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ரூபா அடித்து சொல்கிறார்.
 
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மூலமாக சிறைத்துறை அதிகாரிகளை சசிகலா தரப்பினர் வளைத்து இந்த காரியத்தை சாதித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸின் தலையீடு இதில் உள்ளதாக் பாஜக இதனை கவனித்து வந்து தற்போது சாட்டையை சுழற்றுவதாக பேசப்படுகிறது.
 
அதே நேரத்தில் சசிகலா சீராய்வு மனு தற்போது தாக்கல் செய்துள்ளதால் அதனை நிராகரிக்கவும், சசிகலாவை சிறையில் இருந்து வெளியே அனுப்பக்கூடாது என்பதற்காகவும் இந்த விவகாரத்தை தற்போது பாஜக கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இதனை நிரூபிக்கும் வகையில் அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், சிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தருவதை சசிகலா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார்.
 
மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை அழுக்காக்க முயற்சி நடக்கிறது. சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக கூறச்சொல்லி டிஐஜி ரூபாவை யாரோ தூண்டிவிட்டுள்ளதாக இந்த விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :