Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் தலைமையில் விஸ்வரூபம். நாஞ்சில் சம்பத் செய்யும் காமெடி


sivalingam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (05:59 IST)
அதிமுகவின் முக்கிய தலைகளே தினகரனை ஓரம்கட்ட தொடங்கிவிட்ட நிலையில் கொடுத்த காசுக்காக இன்னும் ஒருசில விசுவாசிகள் மட்டுமே தினகரனுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


 


இந்த வகையில் ஒருவராக நாஞ்சில் சம்பத் இருப்பதாக தெரிகிறது. தற்போது தினகரனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவர் கூறியபோது, 'தினகரன் தலைமையில் ஓரிரு நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் பட்ட நாடே அறிந்த நிலையில் தினகரனின் விஸ்வரூபம் என்ன பாடு படப்போகின்றதோ என நெட்டிசன்கள் நாஞ்சில் சம்பத்தை கலாய்த்து வருகின்றனர்.

அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள், வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி உள்பட அனைவருமே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்புக்கு ஆதரவும், சசிகலா குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் தினகரனிடம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? என்பது மக்கள் அறிந்ததே


இதில் மேலும் படிக்கவும் :