1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (09:18 IST)

திருப்பூரில் மின்னொளி கிரிக்கெட் போட்டி: பேட்டிங் , பெளலிங் செய்த நடிகை நமீதா..!

திருப்பூரில் பாஜக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த நடிகை நமீதா பேட்டிங் மற்றும் பவுலிங் செய்த அசத்தினார். 
 
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நேற்று நடத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஹங்கேரிபாளையம் என்ற பகுதியில் இந்த மின்னொளி கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. 
 
கட்சியின் நிர்வாகிகள் இடையே நடந்த இந்த போட்டியை நடிகை நமீதா தொடக்கி வைத்தார். இந்த போட்டியை தொடங்கி வைத்த அவர் பௌலிங் மற்றும் பேட்டிங் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நமிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva