செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:06 IST)

மேலும் ஒரு மாதம் பரோல் – நீதிமன்றத்தை நாடும் நளினி !

தனது மகள் திருமனத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்துள்ள நளினி பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நளினி தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஒரு மாதக் காலம் பரோல் வழங்கியது.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியே வந்த நளினி தனது மகள் திருமணத்துக்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது பரோல் காலம் இன்னும் 5 நாளில் முடியவுள்ள நிலையில் மகளின் திருமண வேலைகள் இன்னும் முடியவில்லை எனக் கூறி வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் பரோலை ஒரு மாதம் நீட்டிக்க சொல்லி விண்ணப்பித்தார். ஆனால் அதனை சிறைத்துறை நிராகரித்து விட்டது.

இதையடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நளினி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் இது சம்மந்தமாக நாளைக்குள் பதிலளிக்க  வேண்டும் எனத் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.