நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் 32 தலைப்புகளில் 84 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 32 தலைப்புகள் இதுதான்?
1. காங்கிரசும் பாஜகவும் வெவ்வேறல்ல!
2. மாநில உரிமைகளை அடகு வைத்த திமுக, அதிமுக
3. நாடாளுமன்றத்தில் நாம் தமிழர்
4. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்
5. தன்னாட்சியும் கூட்டாட்சியும்
6. மக்களாட்சிக்கு எதிரானவை
7. தேர்தல் சீர்திருத்தம் -சின்னம் இல்லாத் தேர்தல் -வாக்கு இயந்திரத்திற்குத் தடை
8. தொகுதி மேம்பாட்டு நிதியை வீணடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
9. நீதித்துறைச் சீர்திருத்தம்
10. பொறுப்புடைமை உரிமை
11. பெண்ணும் ஆணும் சமம்
12. மணிப்பூர் வன்முறை
13. தேசிய இனங்களுக்கு எதிரானவை
14. சாதி, மதவெறியைத் தூண்டும் வெறுப்பரசியல்
15. நாம் தமிழர் கட்சி எதிர்க்கும் சட்டங்கள்
16. நாம் தமிழர் கட்சி எதிர்க்கும் திட்டங்கள்
17. பணமதிப்பு நீக்கம் என்ற மோசடி
18. சரக்கு மற்றும் சேவை வரி
19. தனியார்மயம் தாராளமயம் உலகமயம்
20. தற்சார்புப் பசுமைத் தாய்மைப் பொருளாதாரம்
21. நீர்வளப் பெருக்கம் -நீர்ப் பங்கீட்டுக்கான தீர்வுகள் -நீர் என்பது பொதுவுடைமை
22. மீனவர்கள் நலன்
23. வேளாண்துறையில் புரட்சி -கால்நடை வளர்ப்பு
24. அறிவை வளர்க்கும் கல்வி
25. மருத்துவத்துறையில் புரட்சி
26. போக்குவரத்துத்துறையில் மாற்றம்
27. மாற்று மின் பெருக்கம்
28. பேரழிவுத் திட்டங்களுக்கு அனுமதி இல்லை
29. காலநிலை மாற்றம்
30. ஈழம் எங்கள் இனத்தின் தேசம்
31. விடுதலைப் புலிகள் - தடை நீக்கம்
32. எழுவருக்கான முழு விடுதலை
Edited by Mahendran