1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (17:57 IST)

கரூரில் மர்ம சப்தம் : பீதியில் பொதுமக்கள் (வீடியோ)

கரூர் மாவட்டத்தில் மதியம் மர்மமான முறையில் ஏற்பட்ட மிகப்பெரிய  சப்தத்தினால் பொதுமக்களிடையே நிலநடுக்கம் என பீதியை கிளப்பியுள்ளது.

 
கரூர் மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென்று மர்மமான முறையில் பலத்த சப்தம் எழுந்ததோடு, அந்த சப்தத்தினால் நிலநடுக்கம் என்று கரூர், மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், காந்திகிராமம், பசுபதிபாளையம், செல்லாண்டிப்பட்டி, தாந்தோன்றிமலை, வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் செய்திகுறிப்பில் நிலநடுக்கம் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என்றும் தகவல் அளித்துள்ளார்.
 
இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன் சேலம், தருமபுரி ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் கரூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனிடையில் இந்த பலத்த சப்தத்தினால் நிலநடுக்கம் என்ற அச்சத்தின் காரணமாக கரூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும், ராணுவ பிளைட் ஒன்று ஜெட் இன்ஜின் சப்தமானது, குளிர்ந்த மேகமூட்டத்தில் மீது பட்டால் இது போன்ற வெடி சப்தம் ஏற்படும் என்றும் அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மதியம் சுமார் 11.30 மணியளவில் ஒரு மிகப்பெரிய சப்தமும், அதை தொடர்ந்து 1.00 மணியளவில் மற்றொரு சப்தமும் ஏற்பட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒரு சிலர், கரூர் காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளில் இருந்து தான் இந்த சப்தம் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். மேலும், அந்த சப்தம் ஏன், ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே அதிர்வுகள் ஏற்பட்டது எதனால் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
- சி. ஆனந்தகுமார்