Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு ஓட்டு போச்சு - எடப்பாடியை எதிர்க்கும் மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ்


Murugan| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:06 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்க உள்ளதாக நடராஜ் கூறியுள்ளார். இதனால், ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டை எடப்பாடி இழந்துள்ளார்.

 

 
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை கூடும் சட்டசபையில் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். அவர் வசம் 124 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதில் ஒரு எண்ணிக்கை குறைந்து தற்போது 123 ஆகியுள்ளது. காரணம், மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், இதனால் தனது எம்.எல்.ஏ பதவி போனாலும் அதுபற்றி கவலையில்லை என அவர் கூறினார். ஆனால், அவர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக வாக்களிப்பேன் எனவும் கூறவில்லை. 

இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதாக கூறப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு 124-ல் இருந்து 123-ஆக குறைந்துள்ளது..

 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் இடையே மோதல் எழுந்த போது, யாருக்கும் எனது ஆதரவு இல்லை என நடராஜ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


இதில் மேலும் படிக்கவும் :