1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 8 மார்ச் 2020 (10:19 IST)

வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் டுவீட்

இன்று மார்ச் -8 ஆம் தேதி  உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு தலைவர்கள், வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.