திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2024 (10:33 IST)

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’ஜாகீர் பாய், அவர் சீக்கிரமே சென்றுவிட்டார், எனினும் அவர் தனது கலையின் மூலம் விட்டு சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம், நன்றி’ என்று தெரிவித்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
தபேலா இசைக்கலைஞர் திரு. ஜாகிர் ஹுசேன் அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்திய இசையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்தவர்களில் முக்கியமானவர். பல இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் .

4 முறை கிராமி விருதுகள், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய அங்கீகாரங்களுடன் தனது இசைப் பயணத்தை தொடர்ந்த அவரது மறைவு, இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்


Edited by Siva